Sunday, December 16, 2007

இந்த வரைபடம் இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது


இலங்கை ஜனாதிபதியின் செயல்பாடுகளை பற்றிய ஒரு சர்வே.

இது இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது.

சிங்கள மக்கள் எந்த அளவு யுத்தத்தை விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.


யுத்தத்திற்கான 2008ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில் சமாதானம் எப்படி வருமென்றுதான் புரியவில்லை.

வரைபடத்தில் UPCOUNTRY TAMIL எனக் குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய வம்சாவழித்தமிழரையே!

மக்களின் விருப்பத்திற்க்கு எதிராக இந்திய வம்சாவழி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்க்கான வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

Unknown said...

//மக்களின் விருப்பத்திற்க்கு எதிராக இந்திய வம்சாவழி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்க்கான வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது//

எமது இனத்திற்க்கு பெருமை சேர்க்கும் விடயம்!!

என்ன ஒரு கேவலமான அரசியல்வாதிகள்........!

வெத்து வேட்டு said...

did anyone take poll about the performances of Prabakaran and ltte aabout
everything?????

மாயாவி said...

வெத்து வேட்டு, உங்களிடம் ஒரு கேள்வி!

பிரபாகரன் போராட்டத்தைக் கைவிட்டால் தமிழர்களுக்கு சமஉரிமை
கொடுத்து தமிழர்களை நிம்மதியாக வாழவிடுவார்கள் என் நம்புகிறீர்களா?

பிரபாகரன் பிறப்பதற்க்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சினை இருக்கிறது.

போராளிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக்கொள்ளாதீர்கள்.

போராளிகளை உருவாக்கியதே அரசியல்வாதிகள்தான்.

இன்று மலேசியத்தமிழர்களின் நிலைக்கு யார் காரணம்?

சிங்களவரைவிட சுய லாபங்களுக்காக அவர்களுக்கு அடிவருடும் தமிழர்கள்தான் தமிழினத்தின் முதல் எதிரி.

வெத்து வேட்டு said...

Mayavi: my answer is Yes if praba is killed by SLArmy tamils situation will improve if only india or some other country by forcing SLgov to look after tamils interest
praba eliminated all politicians and now praba cannot acchieve ANYTHING for tamils..then what the hell is doing..now Praba's fighting looks like an aimless ship wandering in sea....
THIS IS MY VIEW
To me Praba is no better than any dictators like Idi Amin, PolPot
only thing you tamilnadu (or eelam) ltter supporters are seeing ltte's military victories..but these so called victories haven't brought any thing to us..eelam tamils are loosing more and more day by day....

வெத்து வேட்டு said...

everyone is talking about there were problems even before praba's birth but all those problems were solved or actions were taken to solve them (may be not fully but not like what ltte propadandists say) from my life in SL before 1983 tamils lives were better or getting better...fools praba's actions changed everything and now noone can ask singalese why they are killing tamils....
thanks to praba

வெத்து வேட்டு said...

mayavi: my question to you is who found solution to Ireland Probelm? even Palestine?
Rebel fighters or Politicians?
Prabaharan is no better than a crooked politician...

வெத்து வேட்டு said...

MAyavi: I don't know if you knew anything about Indian intervention in SL. Uncle Praba was pleading with then Singala President Premadasa to "SEND BACK IPKF"
If only V.P Singh weren't Indian PM tamils in SL would have lived peacefully

Anonymous said...

இந்த வெத்து வேட்டு ஆரெண்டு கனநாளா யோசிச்சுக் கொண்டிருந்தன், இப்பதான் வெளிய வந்திருக்கிறார்.

இந்திய அமைதி காக்கும்படை பற்றின கடைசிப் பின்னூட்டம் காட்டிக்குடுத்திட்டுது.

செய்து கொண்டிருந்த அட்டூழியங்களைத் தொடர முடியாமல் திருப்பிக் கூப்பிட்டிட்டாங்கள் எண்ட வயித்தெரிச்சல்தான் இந்த வெத்து வேட்டின்ர இணையப் புலம்பல்களுக்குக் காரணம்.
அப்பு, இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தா உன்னையுமெல்லே போட்டுத் தள்ளியிருப்பாங்கள்?

மாயாவி said...

//from my life in SL before 1983 tamils lives were better or getting better//

நீங்கள் கூறியதுபோல் 1983 இனக்கலவரத்திற்க்கு முன் தமிழர்கள் இலங்கையில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்றால்!! ஏன் 1977,1981ல் இனக்கலவரம் ஏற்பட்டது.

(1977 கலவரத்தில் தமிழர் என்ற காரணத்தினால் எனது தந்தையார் பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டு வீதியில் நிர்வாணமாக வைத்துத் தாக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்தது கண்டியில்.)

1956ல் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டது ஏன்?

பல்கலைக்கழக அனுமதிக்கு வெட்டுப்புள்ளி முறை கொண்டு வந்து ஏன்?

தமிழரின் எந்தப் பிரச்சினையை சிங்களவர்கள் அரசியல் ரீதியாக தீர்த்து வைத்தார்கள் கூறுங்கள் பார்க்கலாம்.

வேண்டுமானால் சிங்களவரை சிங்கள அரசை அண்டிப் பிழைத்த ஒரு சில தமிழரின் சொந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

//I don't know if you knew anything about Indian intervention in SL. Uncle Praba was pleading with then Singala President Premadasa to "SEND BACK IPKF"//

இது ஒருஅர்த்தமற்ற கற்பனை. அன்னிய ராணுவம் எமது மண்ணில் இருக்கக்கூடாது என்ற ஜனாதிபதி பிரேமதாஸவின் எண்ணமே IPKF ஐ நாட்டிலிருந்து வெளியேற்றியது.

உங்கள் கருத்துப்படி சிங்களவர் வீசியெறியும் சில சலுகைகளுக்காக குட்ட குட்டக் குனிந்து கொண்டே இருக்க வேண்டும், தன்மானத்துடன் எதிர்த்துக் கேட்க்கக்கூடாது! அப்படித்தானே?

அதைவிட தன்மானமுள்ள தமிழனாக போராடுவதே தமிழரான எமக்குப் பெருமை.