Friday, June 12, 2009

ஞானி ஏன் என்னோட எல்லா விபரத்தையும் கேக்குறாரு!!

ஞானி ஏன் என்னைப்பத்தி எல்லா விசயத்தையும் கேக்குறாரு?


அண்மைகாலமாக இணையத்தில் சில வலைப்பக்கங்களில் ஏதாவது வாசிக்க, தேட அல்லது தரவிறக்க வேணும்னா நம்மளப் பத்தி விபரங்களை பதிவு செய்து வலைப்பக்கத்தில் உறுப்பினராகும்படி கேக்குறாங்க.

வங்கி, வருமானவரி, கிரடிட்கார்ட் அல்லது இது மாதிரியான மிக முக்கியமான தளங்களில் எங்களைப் பத்திய விபரங்களை பதியுறது ஏதும் தவறில்லை.

ஆனால்!!!

அண்மையில் ஞானியின் வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அப்படீன்னு போனா!! ஆணா, பெண்ணா, பிறந்த திகதி, ஊரு, அட்ரஸ், வீட்டு போன் நம்பர், மொபைல் நம்பர்............எல்லாம் கேக்குறாரு. பேசாம பக்கத்தை மூடீட்டேன்.

எல்லோரும் வாசிக்கனும் அப்படீன்னுதான் வலைப்பக்கத்திலேயே எழுதுறீங்க, அப்புறம் எதுக்கு வாசிக்க வர்றவங்களோட சொத்துவிபரம் வரைக்கும் கேட்டு உயிரை வாங்குறீங்க??

அண்டவேர் கலர் வரைக்கும் சொன்னாதான் வாசிக்க விடுவோம் அப்படீன்னா, வாசிக்கவே வரல.

பொய்யா ஒரு பெயரையும், ஊரையும் கொடுத்து பதிவு செஞ்சு வாசிச்சிருக்கலாம், ஆனா நமக்கு அது சரிவராது.

உலகம் முழுக்க பாப்புலரான "டிவிட்டர்"லேயே இது ஒன்னும் கேக்கிறது இல்லை.

ஞானி இந்த விபரங்களை எல்லாம் வச்சு என்ன செய்ய போறாரு? ஒருவேளை இந்த விவரங்களை எல்லாம் காசுக்கு விக்கலாம் அப்படீன்னு பிளான் வச்சிருக்காரோ என்னவோ!!

நீங்க எழுதுறத எல்லாரும் வாசிக்கனும்னா பேசாம, பேரையும் ஈமெயில் ஐடியையும் வாங்கீட்டு வாசிக்கவிடுங்க, இல்லன்னா இன்னும் கொஞ்சநாள்ல வலையில நீங்க எழுதுனத நீங்களேதான் வாசிக்கவேண்டியிருக்கும்!!

10 comments:

ரவி said...

:)))))))))))))))

ஈஸ்வர் said...

சரியகசொநீர்கள். எனக்கும் எல்லா விவரங்களையும் கொடுக்க தயக்கமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. இருந்தாலும் விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொண்டேன். Unfortunately I am not so sure it is worth all the trouble.

Anonymous said...

எனக்கும் அதே எரிச்சல்தான். ஆனால் ஒரே போராக இருந்ததால் தற்போது unsubscribe பண்ணி விட்டேன்.

Unknown said...

//அண்டவேர் கலர் வரைக்கும் சொன்னாதான் வாசிக்க விடுவோம் அப்படீன்னா, வாசிக்கவே வரல.//
:))))

ஞானி மட்டுமல்ல, நிறைய வலைப்பக்கங்கள் இப்படித்தான்.
இது ஒரு வியாபாரம். உங்களைப் பற்றிய விபரங்களை வைத்து உங்களுக்கு ஈமெயில் அல்லது கடிதம் வரலாம்.

முடிந்தளவு உண்மையான பெயர்/விபரம் சொல்லாமல் இருப்பது நலம்.

சென்ஷி said...

// செந்தழல் ரவி said...

:)))))))))))))))//

ரிப்பீட்டே!

மாயாவி said...

அட எனக்குத்தான் இப்படீன்னு நெனச்சா, நெறைய பேர் இருப்பாங்க போல இருக்கு!!!!

Anonymous said...

ஞானி மட்டுமா!! இங்கு ப்ளாக் எழுதுபவர்களே கேட்கிறார்கள்.

Anonymous said...

ஏன் இன்னும் சாரு கேட்கவில்லை!
ஆச்சரியமாக இருக்கிறது!

மாயாவி said...

சாருவையும் இதுல சேர்த்தாச்சா?
இனிமேல் சாருவும் கேட்பாரோ என்னவோ?

பனிவிழும் மலர்வனம் said...

//ஞானி இந்த விபரங்களை எல்லாம் வச்சு என்ன செய்ய போறாரு? ஒருவேளை இந்த விவரங்களை எல்லாம் காசுக்கு விக்கலாம் அப்படீன்னு பிளான் வச்சிருக்காரோ என்னவோ//
ஞானி செஞ்சாலும் செய்வான். அந்தாளுக்கு மறை கழன்று விட்டதாகத்தான் நண்பர்கள் சொல்கிறார்கள். எல்லாரையும் சும்மா சகட்டு மேனிக்கு திட்டித்திட்டியே மனுஷன் பிரபலமாகிட்டான். இந்தாளை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் சரி என் நான் நினைக்கிறேன்.