Friday, October 19, 2007

ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ள செய்தியானது எம்மை வேதனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன - மனோ கணேசன். எம்.பி

இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்கு பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்துகொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலை புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் வடபுல, சீன, பாகிஸ்தானிய எல்லை 1960 வதுகளில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக்கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந் தொகையினரை மீளப்பெற்றுகொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது.

உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஒருவரையும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. இதனால், அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால், எமது அரசியல் பலமும் குறைந்துவிட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும், தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேபோல, தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980களில் அன்றைய ஜே.ஆரின் ஜ.தே.க. அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும், சுமார் 1500 இந்திய வீரர்களையும், இழந்தது. அதேபோல், இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுக்களை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒரு போதும் தீர்வுகளை தராது.

இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்த தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும், வேதனையும் அடைகின்றோம்.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கைப் பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது. இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும்.

இலங்கையில் சமாதானத்திற்கும், யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும், ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்க வில்லையே.

இலங்கையின் ஐக்கியத்திற்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது. இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அதுவே எங்களின் நிலைப்பாடும் ஆகும்.

5 comments:

Anonymous said...

Singalese and Tamils all came from India...
India helped Tamils first..then tamils showed their ass to india..now India is giving arms to place wedge in tamils ass....
accept it and be happy

மாயாவி said...

அனானிக்கு இலங்கைத் தமிழர் மேல் அப்படி என்ன கோபம்.

விடுதலைப் புலிகள் மட்டுமில்லையே அப்பாவித் தமிழர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அன்றே சமாதானத்திற்க்கு வழிகாட்டாமல் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்ச்சி வழங்கி அவர்களை வளர்த்தது இந்தியாதானே.

ஈட்டி said...

உலகிலேயே மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று சொல்கிறார்கள்.

ஆனால் அதிகளவில் மத சண்டைகளும், கலவரங்களும் மத ரீதியிலான அரசியல் கட்சிகளும் நிறைந்த ஒரு நாடு.

இலங்கையை விடுங்கள், இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதோ இல்லையோ, தன்னைச் சுற்றி இருக்கும் எந்த ஒரு நாடும் ஜனநாயக ரீதியில் அமைதியாக இருப்பதை இந்தியா விரும்பியதில்லை.

இலங்கையை விடுங்கள், இந்த மியன்மார்(பர்மா) ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு குரல் கொடுத்ததுண்டா. மணிப்பூரில் எந்த பிரச்சினையும் வராமலிருக்க (பர்மா மூலமாக) பர்மா செய்வதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

நல்லவேளை தலாய் லாமா நாடில்லாமல் இருப்பதால் திபெத்தை விட்டு வைத்திருக்கிறது. நாளை திபெத் ஒரு தனி நாடானால் அங்கேயும் தனது ஜனநாயக!!!! வேலைகளை ஆரம்பித்திருக்கும்.

காலச்சக்கரம் ஒரு சுழல் வரும் போது அதன் பலனை இந்தியா அனுபவிக்கும்.

Anonymous said...

there is religious riots becuase there is freedom for everyone to do everything..and selfish morons are killing each others and vulnerable people in the name of Religion...
look at Kilinochi...did anyone raise "any voice" against LTTE????
you are saying 100% of the people are happy with ltte?????????????
Pakistan, Bangaladesh and Srilanka all have problem not because of india...becuase of selfish morons who want to rule those countries...
india learnt its lesson by "preparing" morons(ie: raising armed group)..if only india spent time and selected little bit educated people to "prepare"...this tamil singala problem would have been solved and SL would have come under Indian control in 80s..it took almost 20yrs extra...
ltte kudukira kaiyeye kadikira naye..

மாயாவி said...

அனானி,

இந்தப் பதிவு விடுதலைப் புலிகளைப் பற்றியதோ அல்லது அவர்களது கட்டுப்பாட்டில் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா இல்லையா என்பதல்ல.

இந்தியா அதிகளவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதன் மூலம் பாதிப்படைவது அப்பாவி தமிழ் மக்கள் என்பதுதான்.

சமீப காலமாகத்தான் இந்தியா அதிகளவில் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் தமிழ் மக்கள் அரசாசாங்கத்தால்
மோசமாக பலிவாங்கப்படும் நேரத்தில்!!

அதையும் வெளிப்படையாக வழங்குவதில்லை. தமிழக மக்களுக்குத் தெரியாமல்தான் வழங்குகிறது.

ஆயுதங்களின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு முடிவு காணமுடியாது என தெரிந்தே ஆயுதங்களை வழங்குகிறது.