வான்பாதுகாப்பு ஆயுதங்கள் இலங்கைக்கு இந்தியா விநியோகம்
புதுடில்லி: இலங்கை நிலைவரம் கொந்தளிப்பானதாக இருந்ததால் இந்தியா வான்பாதுகாப்பு துப்பாக்கிகளை கொழும்புக்கு வழங்கியதாக இந்தியாவின் புதிய இராணுவத்தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்திருக்கிறார்.
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் தரை, வான்மார்க்க தாக்குதல் இடம்பெற்று சில தினங்கள் கடந்த நிலையில் இந்தக் கருத்தை இந்திய இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
ஆயுத விநியோகம் தொடர்பாக அதிகளவிலான கோரிக்கைகளை கொழும்பு இந்தியவாவிடம் முன்வைத்திருந்ததாகவும் அவை தொடர்பாக இந்திய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் தீபக் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் ஆயுதப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு அடி வாங்கினாலும் இலங்கை அரசு திருந்தப்போவதில்லை. இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப் போவதில்லை.
இலங்கையில் சமாதானம் மலர்வதில் இந்தியாவிற்க்கு உள்ள சிக்கல் என்னவோ தெரியவில்லை!!?
Monday, October 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
என்ன செய்ய! வல்லரசு நாடுகள் தங்கள் சுயலாபங்களுக்காக சிறிய நாடுகளை சீரழிப்பது சகஜம்தானே!
அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்க்கும் பெரிய வித்தியாசமில்லை.
Post a Comment