Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மாயாவி

Friday, June 12, 2009

ஞானி ஏன் என்னோட எல்லா விபரத்தையும் கேக்குறாரு!!

ஞானி ஏன் என்னைப்பத்தி எல்லா விசயத்தையும் கேக்குறாரு?


அண்மைகாலமாக இணையத்தில் சில வலைப்பக்கங்களில் ஏதாவது வாசிக்க, தேட அல்லது தரவிறக்க வேணும்னா நம்மளப் பத்தி விபரங்களை பதிவு செய்து வலைப்பக்கத்தில் உறுப்பினராகும்படி கேக்குறாங்க.

வங்கி, வருமானவரி, கிரடிட்கார்ட் அல்லது இது மாதிரியான மிக முக்கியமான தளங்களில் எங்களைப் பத்திய விபரங்களை பதியுறது ஏதும் தவறில்லை.

ஆனால்!!!

அண்மையில் ஞானியின் வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அப்படீன்னு போனா!! ஆணா, பெண்ணா, பிறந்த திகதி, ஊரு, அட்ரஸ், வீட்டு போன் நம்பர், மொபைல் நம்பர்............எல்லாம் கேக்குறாரு. பேசாம பக்கத்தை மூடீட்டேன்.

எல்லோரும் வாசிக்கனும் அப்படீன்னுதான் வலைப்பக்கத்திலேயே எழுதுறீங்க, அப்புறம் எதுக்கு வாசிக்க வர்றவங்களோட சொத்துவிபரம் வரைக்கும் கேட்டு உயிரை வாங்குறீங்க??

அண்டவேர் கலர் வரைக்கும் சொன்னாதான் வாசிக்க விடுவோம் அப்படீன்னா, வாசிக்கவே வரல.

பொய்யா ஒரு பெயரையும், ஊரையும் கொடுத்து பதிவு செஞ்சு வாசிச்சிருக்கலாம், ஆனா நமக்கு அது சரிவராது.

உலகம் முழுக்க பாப்புலரான "டிவிட்டர்"லேயே இது ஒன்னும் கேக்கிறது இல்லை.

ஞானி இந்த விபரங்களை எல்லாம் வச்சு என்ன செய்ய போறாரு? ஒருவேளை இந்த விவரங்களை எல்லாம் காசுக்கு விக்கலாம் அப்படீன்னு பிளான் வச்சிருக்காரோ என்னவோ!!

நீங்க எழுதுறத எல்லாரும் வாசிக்கனும்னா பேசாம, பேரையும் ஈமெயில் ஐடியையும் வாங்கீட்டு வாசிக்கவிடுங்க, இல்லன்னா இன்னும் கொஞ்சநாள்ல வலையில நீங்க எழுதுனத நீங்களேதான் வாசிக்கவேண்டியிருக்கும்!!

Tuesday, May 12, 2009

தயவு செய்து இதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள்!!

தயவு செய்து இப்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனசாட்சியின்படி வாக்களியுங்கள்.


சோமாலியாவைவிட மோசமாக இன்று வன்னியில் தமிழர்களின் நிலை.


காலம் காலமாக உழைத்து உயர்வாக வாழ்ந்த ஒரு இனம் இன்று தனது மண்ணிலேயே அகதியாக ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்க்கும் கொடுமைக்கு தமிழினத்தலைவர் என பட்டம் சூட்டிக்கொண்ட கருணாநிதியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


உண்ணாவிரதம் / போர்நிறுத்தம் என்ற பெயரில் கலைஞரின்
நாடகம்.

எப்படியாவது வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என்று திமுக/காங்கிரஸ் கூட்டணி தலைகீழாக நிற்பது எல்லோருக்கும் தெரியும்.

வாக்களிக்க பணம் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்ளுகள். முடிந்தால் இன்னும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனசாட்சியின்படி உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யக்கூடிய ஒருவருக்கு வாக்களியுங்கள்.

வாங்கிய பணத்தின் மீதோ பாலின் மீதோ சத்தியம் பண்ணச் சொன்னால் தைரியமாக பொய் சத்தியம் பண்ணுங்கள்!!! (வேண்டுமானால் மனதிற்க்குள் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்)

கடவுள் இதற்கெல்லாம் வந்து கண்ணைக் குத்தமாட்டார்.!!! உண்மையிலேயே கடவுள் சந்தோசப்படுவார். இவர்களிடம் உள்ள பணத்தை இப்படித்தான் கறக்க வேண்டும். கடவுள் என்பது மிக அற்புதமான விஷயம். இந்த மாதிரி தேர்தல் திருடர்களை தண்டிப்பது ஒன்றும் சாமி குற்றமாகாது.

நீங்கள் அதிஷ்டசாலியாக இருந்தால், தேர்தலுக்கு முதல் நாள் உங்கள் தொகுதி வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டால் உங்களுக்கு மீண்டுமொருமுறை பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!!. மதுரை, ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது. முடிந்தால் தேர்தல் ஒத்திவைப்புக்கோ அல்லது ஒரு இடைத்தேர்தலுக்கோ கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்


இன்று, இன்று மட்டுமே உங்கள் கையில் இருக்கக்கூடிய பலமான ஆயுதம் உங்கள் வாக்கு. அதை சரியாக பயன் படுத்துங்கள்.


இன்று எமது இனத்திற்க்காக நாம் குரல் கொடுக்காவிட்டால், நாளை எமக்காக குரல் கொடுக்க யாருமே இருக்கமாட்டார்கள்!!!Wednesday, April 29, 2009

புலிகளுக்கு உதவி செய்யும் பயங்கரவாதிகளின் படங்கள்.
புலிகளுக்கு உதவி செய்யும் பயங்கரவாதிகளின் படங்கள் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளதைப் பாருங்கள். சர்வதேச நாடுகளின் நிதியை பெருமளவில் நம்பியிருக்கும் இலங்கைக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

அரசின் அனுமதியோடு நடக்கும் கூத்து!!

இவர்களுக்கே இப்படியென்றால் இந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு எதைத் தரப்போகிறார்கள்.


சிங்கள அரசுக்கு துணைபோகும் காங்கிரசும், திமுகவும் பலனை அனுபவிப்பார்கள் எனத் தோன்றுகிறது.


Wednesday, January 7, 2009

தமிழீழத்தின் தளம் தமிழ்நாட்டுக்கு மாறுமா??

தமிழீழமும் தனித்தமிழ்நாட்டு கோரிக்கையும்!!தமிழ்நாடு இந்தியாவிலா இருக்கிறது என்ற கேள்வி மனதில் எழுகிறது. காரணம் மத்திய அரசு தமிழ்நாட்டை எந்தவிதத்திலும் மதிப்பதாகவோ அல்லது கண்டுகொள்வதாகவோ இல்லை. அது தெரிந்தாலும்கூட பதவியிலிருப்பதற்க்காக எங்கள் அரசியல்வாதிகள் அதைப்பற்றிக் கவலைப் படுவதாக இல்லை.இலங்கையில் ஒரு நிழல் யுத்தத்தை இந்தியா நடத்திக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இலங்கை அரசுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்கிறது. இதற்க்கு ராஜீவின் மரணம் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அதற்க்கு மேலும், வேறு சில காரணங்களும் தேவைகளும் இருக்கின்றன என்று நினைக்கத்தோன்றுகிறது.நாளை விடுதலப் புலிகளின் போராட்டம் காரணமாக ஒரு தமிழீழம் அமையுமானால் அதன் பிரதிபலிப்பு தமிழகத்தில் எதிரொலிக்கும் என்பதுதான்.நாளை தமிழீழம் அமைந்தால், புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர்கள் அனைவரும் பொருளாதாரரீதியாக ஈழத்தை கட்டி எழுப்பி மிகவேகமாக முன்னேற்றமடைந்த ஒரு நாடாக மாற்றிவிடுவார்கள். தனது காலடியில் தன்னைவிட வளர்ச்சியுள்ள ஒரு நாடாக ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது. இந்த வளர்ச்சி ஒரு தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கை மீண்டும் இந்தியாவில் எழுவதற்க்கு ஒரு காரணமாக அமையலாம் என இன்றைய ஆட்சியாளர்கள் நினைக்கலாம்.அதனால்தான் இலங்கை அரசு எவ்வளவோ கேவலப்படுத்தியும் இந்தியா வலியச்சென்று உதவி செய்கிறது.நேற்று இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியில் தென்னிந்திய படங்களை திரையிடுவதை தடை செய்யும்படி பரவலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. (போலீஸ் துணையுடன் நோட்டீஸ் ஒட்ட இலங்கை அரசாங்கமே உதவியது) மத்திய மாகாணம் என்பது இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஒரு மாகாணமாகும். (நிறைய தேயிலைத்தோட்டங்கள் இங்குதான் உள்ளது).இலங்கையில் திரையிடப்படும் தென்னிந்திய மொழிப்படங்கள் தமிழ்ப் படங்கள் மட்டுமே.இந்தியாவின் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் தவிர்த்து மற்றையவற்றிக்கு தடையில்லை. (இந்திப் படங்களுக்குத் தடையில்லை.)இலங்கை அரசாங்கமே முழுத்தமிழர் மீதும் ஒரு இனத்துவேஷத்தை கக்குகிறது. ஈழத்தமிழர்கள் தவிர்த்து இலங்கையில் சுமார் பண்ணிரண்டு லட்சம் இந்திய வம்சாவழித்தமிழர்கள் வாழ்கிறார்கள். ( இவர்களை சிங்கள அரசுக்கு சமமாக இந்தியா முதுகில் குத்தியது தனிக்(கண்ணீர்)கதை.

இவர்கள் நேரடியாக விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிட்டாலும்கூட, சிங்கள அரசின் துவேஷம்/கெடுபிடிகள் காரணமாக மனதளவில் ஆதரிக்கிறார்கள்.முழுநேர அரசியல்வாதியான ஒரு புத்த பிக்கு (MP) வன்னி முழுவது சிங்களவருக்கே சொந்தமென கூறுகிறார். இலங்கை ராணுவம் ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றியவுடன் அந்த இடத்தில் ஒரு சிங்கக்கொடியேற்றி கூடவே ஒரு புத்தர் சிலையையும் வைத்துவிடுகிறார்கள். இம்மாதிரியான செயல்கள் தமிழர்களை மேலும் விடுதலைப் புலிகளின் பக்கமே செல்லவைக்கிறது. இது ஒரு வகையில் புலிகளுக்குப் பலம்தான்.நாளை வன்னியில் பிரபாகரன் கொல்லப்பட்டால் அதற்க்கான முழுப்பழியும் புதுடில்லியின் மேல் விழும். புதுடில்லிக்கு எதிரான ஒரு வெறுப்பு உணர்வு உலகம் முழுவதும் தமிழ்நாடு உட்பட அனைத்துத் தமிழர்களிடம் தோன்றும்.பிரபாகரனின் மரணத்தின் மூலம் விடுதலைப் போராட்டம் அணைவதற்க்கு பதிலாக கொழுந்துவிட்டெரியும் ஒரு சூழ்நிலை உருவாகலாம். அந்தப் போராட்டத்தின் தளம் தமிழ்நாட்டுக்கும் மாறலாம். தமிழீழப்போராளிகளில் அதிகமானோர் இந்தியாவுடனான ஒரு தொடர்பை எப்பொழுதுமே வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த ஒரு போராட்டத்திற்க்கு மேலும் உணர்வூட்டலாம். அப்பொழுது அத்தளத்தின் வீச்செல்லை மிக அதிகமாக இருக்கும். அந்நேரம் இன்றைய சூழ்நிலையைவிட மிக மோசமான ஒரு நிலைமையை புதுடில்லி எதிர்நோக்கக்கூடும்.அப்படியான ஒரு சூழழில் இன்று பதவியில் தொங்கிக்கொண்டும் பதவிக்காக அலைந்துகொண்டுமிருக்கும் அரசியல்வாதிகள் "தமிழ்த்துரோகி"களாக அடையாளம் காணப்படலாம்.இந்நிலைமை சீனாவிற்க்கும், பாகிஸ்தானுக்கும் இது ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்தும். இன்று விடுதலைப்புலிகளை அழிக்க உதவி செய்யும் இதே பாகிஸ்தான் நாளை இந்தியாவில் தனித்தமிழ்நாட்டுப் போராளிகளுக்கு உதவி செய்யும். மேற்குலகை புறக்கணித்து சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியோரின் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் நடத்திவரும் இலங்கை, நாளை பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு போரில் ஈடுபடுமானால் பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை தெரிவிக்கும்.பிரதமரின் அரசியல் ஆலோசகர்களாக தமிழர்கள் சிலரை
பதவியிலிருத்தும்வரை இந்தியா இலங்கைப் பிரச்சினையில் குளறுபடி செய்யவே செய்யும்.இலங்கைத்தீவில் தமிழர்க்கென, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு அமையும்வரை இலங்கைப் பிரச்சினை தீராது.