தமிழீழமும் தனித்தமிழ்நாட்டு கோரிக்கையும்!!தமிழ்நாடு இந்தியாவிலா இருக்கிறது என்ற கேள்வி மனதில் எழுகிறது. காரணம் மத்திய அரசு தமிழ்நாட்டை எந்தவிதத்திலும் மதிப்பதாகவோ அல்லது கண்டுகொள்வதாகவோ இல்லை. அது தெரிந்தாலும்கூட பதவியிலிருப்பதற்க்காக எங்கள் அரசியல்வாதிகள் அதைப்பற்றிக் கவலைப் படுவதாக இல்லை.
இலங்கையில் ஒரு நிழல் யுத்தத்தை இந்தியா நடத்திக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இலங்கை அரசுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்கிறது. இதற்க்கு ராஜீவின் மரணம் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அதற்க்கு மேலும், வேறு சில காரணங்களும் தேவைகளும் இருக்கின்றன என்று நினைக்கத்தோன்றுகிறது.
நாளை விடுதலப் புலிகளின் போராட்டம் காரணமாக ஒரு தமிழீழம் அமையுமானால் அதன் பிரதிபலிப்பு தமிழகத்தில் எதிரொலிக்கும் என்பதுதான்.
நாளை தமிழீழம் அமைந்தால், புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர்கள் அனைவரும் பொருளாதாரரீதியாக ஈழத்தை கட்டி எழுப்பி மிகவேகமாக முன்னேற்றமடைந்த ஒரு நாடாக மாற்றிவிடுவார்கள். தனது காலடியில் தன்னைவிட வளர்ச்சியுள்ள ஒரு நாடாக ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது. இந்த வளர்ச்சி ஒரு தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கை மீண்டும் இந்தியாவில் எழுவதற்க்கு ஒரு காரணமாக அமையலாம் என இன்றைய ஆட்சியாளர்கள் நினைக்கலாம்.
அதனால்தான் இலங்கை அரசு எவ்வளவோ கேவலப்படுத்தியும் இந்தியா வலியச்சென்று உதவி செய்கிறது.
நேற்று இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியில் தென்னிந்திய படங்களை திரையிடுவதை தடை செய்யும்படி பரவலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. (போலீஸ் துணையுடன் நோட்டீஸ் ஒட்ட இலங்கை அரசாங்கமே உதவியது) மத்திய மாகாணம் என்பது இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஒரு மாகாணமாகும். (நிறைய தேயிலைத்தோட்டங்கள் இங்குதான் உள்ளது).
இலங்கையில் திரையிடப்படும் தென்னிந்திய மொழிப்படங்கள் தமிழ்ப் படங்கள் மட்டுமே.
இந்தியாவின் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் தவிர்த்து மற்றையவற்றிக்கு தடையில்லை. (இந்திப் படங்களுக்குத் தடையில்லை.)
இலங்கை அரசாங்கமே முழுத்தமிழர் மீதும் ஒரு இனத்துவேஷத்தை கக்குகிறது. ஈழத்தமிழர்கள் தவிர்த்து இலங்கையில் சுமார் பண்ணிரண்டு லட்சம் இந்திய வம்சாவழித்தமிழர்கள் வாழ்கிறார்கள். ( இவர்களை சிங்கள அரசுக்கு சமமாக இந்தியா முதுகில் குத்தியது தனிக்(கண்ணீர்)கதை.
இவர்கள் நேரடியாக விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிட்டாலும்கூட, சிங்கள அரசின் துவேஷம்/கெடுபிடிகள் காரணமாக மனதளவில் ஆதரிக்கிறார்கள்.
முழுநேர அரசியல்வாதியான ஒரு புத்த பிக்கு (MP) வன்னி முழுவது சிங்களவருக்கே சொந்தமென கூறுகிறார். இலங்கை ராணுவம் ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றியவுடன் அந்த இடத்தில் ஒரு சிங்கக்கொடியேற்றி கூடவே ஒரு புத்தர் சிலையையும் வைத்துவிடுகிறார்கள். இம்மாதிரியான செயல்கள் தமிழர்களை மேலும் விடுதலைப் புலிகளின் பக்கமே செல்லவைக்கிறது. இது ஒரு வகையில் புலிகளுக்குப் பலம்தான்.
நாளை வன்னியில் பிரபாகரன் கொல்லப்பட்டால் அதற்க்கான முழுப்பழியும் புதுடில்லியின் மேல் விழும். புதுடில்லிக்கு எதிரான ஒரு வெறுப்பு உணர்வு உலகம் முழுவதும் தமிழ்நாடு உட்பட அனைத்துத் தமிழர்களிடம் தோன்றும்.
பிரபாகரனின் மரணத்தின் மூலம் விடுதலைப் போராட்டம் அணைவதற்க்கு பதிலாக கொழுந்துவிட்டெரியும் ஒரு சூழ்நிலை உருவாகலாம். அந்தப் போராட்டத்தின் தளம் தமிழ்நாட்டுக்கும் மாறலாம். தமிழீழப்போராளிகளில் அதிகமானோர் இந்தியாவுடனான ஒரு தொடர்பை எப்பொழுதுமே வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த ஒரு போராட்டத்திற்க்கு மேலும் உணர்வூட்டலாம். அப்பொழுது அத்தளத்தின் வீச்செல்லை மிக அதிகமாக இருக்கும். அந்நேரம் இன்றைய சூழ்நிலையைவிட மிக மோசமான ஒரு நிலைமையை புதுடில்லி எதிர்நோக்கக்கூடும்.
அப்படியான ஒரு சூழழில் இன்று பதவியில் தொங்கிக்கொண்டும் பதவிக்காக அலைந்துகொண்டுமிருக்கும் அரசியல்வாதிகள் "தமிழ்த்துரோகி"களாக அடையாளம் காணப்படலாம்.
இந்நிலைமை சீனாவிற்க்கும், பாகிஸ்தானுக்கும் இது ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்தும். இன்று விடுதலைப்புலிகளை அழிக்க உதவி செய்யும் இதே பாகிஸ்தான் நாளை இந்தியாவில் தனித்தமிழ்நாட்டுப் போராளிகளுக்கு உதவி செய்யும். மேற்குலகை புறக்கணித்து சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியோரின் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் நடத்திவரும் இலங்கை, நாளை பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு போரில் ஈடுபடுமானால் பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை தெரிவிக்கும்.
பிரதமரின் அரசியல் ஆலோசகர்களாக தமிழர்கள் சிலரை
பதவியிலிருத்தும்வரை இந்தியா இலங்கைப் பிரச்சினையில் குளறுபடி செய்யவே செய்யும்.
இலங்கைத்தீவில் தமிழர்க்கென, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு அமையும்வரை இலங்கைப் பிரச்சினை தீராது.